அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மணிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் டிபி மாற்றும் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு ஃபேஸ்புக் கொண்டு சென்றுள்ளது. அதன் துவக்கம்தான் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வீடியோ! நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்கின் புதிய இந்த ப்ரொஃபைல் வீடியோ வசதி, இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக அமையும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போகும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து போட்டோ வைத்த சமூகம், இப்போது வீடியோவை தட்டி விடப்போகிறது.

யாருக்கு தெரியும் நான் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறேன் என்பது துவங்கி கோயம்பேட்டில் ஊருக்கு போக பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன், கும்பகோணத்துக்கே போய் டிகிரி காபி குடிக்கிறேன் என வீடியோக்கள் முகங்கள் ஆகலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-