அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நாம் யாராக இருந்தாலும் நம் வாழ்வில் சாகும் முன் எதாவது ஒரு சாதனை செய்து பெருமை அடைய வேண்டும் என்பது எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த சாதனை செய்வதற்கான முயற்சி செய்ய மாட்டோம். அதுமட்டுமல்லாமல் எவ்வாறு முயற்சி செய்து சாதனை செய்வது என்பதும் நமக்கு தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் வைத்து சாதனை செய்யலாம். இதற்கு உதாரணம் தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள்.இந்த கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவிகள் 171 பேர் இணைந்து ஒரு மாத காலத்தில் 65,000 ஊக்குபின்களை (Safety Pin) சேகரித்து பந்து வடிவில் வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த ஊக்குபின் சேகரிப்பில் 49,000 ஊக்குபின்களை சேகரித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த மாணவிகள் முறியடித்துள்ளனர்.இதுகுறித்து அவர்களின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியை மனோசித்ரா கூறுகையில், ''கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அனைவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணம் வாங்காமல் எப்படி தாங்களே சொந்தமாக சாதனை முயற்சி செய்யலாம் என்று சிந்தித்த போது வந்தது தான் இந்த சிந்தனை. ஊக்குபின்னை அனைத்து பெண்களும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதை எளிதில் சேகரித்து விடலாம் என்று மாணவிகள் கூறினார்கள். தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடத்து விட்டார்கள்.இந்த ஊக்கு பந்தை (Safety Pin Ball) உருவாக்கிய பிறகு லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும், கின்னஸ் விருதுக்கும் விண்ணப்பித்திருந்தாேம். தற்போது லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் எங்களுடைய மாணவிகளின் உழைப்பும் கல்லூரி முதல்வரின் ஒத்துழைப்பும் தான்'' என்றார் மகிழச்சி பொங்க...

எந்த ஒரு சிறிய விஷயத்தையும் வைத்து சாதனை செய்ய முயற்சிக்கலாம். அதற்கான முயற்சியை எடுத்து நீங்களும் சாதனையாளர் ஆகலாம். இதற்கு இவர்கள் தான் உதாரணம். சாதனை செய்த மாணவிகளுக்கு வாழ்த்து கூறிவிட்டு விடைபெற்றோம்.

நீங்களும் வாழ்த்துங்கள்!

-மு.ஜெயராஜ்

படங்கள்: ம.அரவிந்த்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-