அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஒவ்வொரு நாட்டிலும், ஏன் ஒவ்வொரு பகுதி சார்ந்தும் உணவு முறையில், சமைக்கும் முறையிலுமே கூட நிறைய வேறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கும். இதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். அதிலும் சீனர்களின் உணவுப் பழக்கம் சற்று விந்தையாகவே இருக்கிறது.


ஆனால், சமீபத்தில் டோக்யோவில் இருக்கும் ஓர் சுகாதார மையத்தில் நடத்தப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வில், ஜப்பானிய டயட் முறையை பின்பற்றுவதால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன, வாழ்நாள் நீடிக்க இது வெகுவாக உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது….


டோக்யோ

டோக்யோவில் உள்ள உலகளாவிய சுகாதாரம் மற்றும் மருத்துவ தேசிய மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான அளவு மீன் மற்றும் இறைச்சி உண்ணும் ஜப்பானிய டயட் முறை அவர்களது வாழ்நாள் நீடிக்க சீரான முறையில் உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.


ஜப்பானிய அரசாங்கம்

கடந்த 2005-ம் ஆண்டு ஜப்பானிய அரசு உணவு உண்ணும் முறைக்கு ஓர் அட்டவணை உருவாக்கியது. அதில், எந்தெந்த உணவுகள் உண்ண வேண்டும், எவ்வளவு அளவு, கால நேர இடைவேளை குறித்த ஓர் உணவு வழிகாட்டியை மேம்படுத்தி அறிமுகப்படுத்தியது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சியாளர்கள் அந்த உணவு வழிகாட்டியை பின்பற்ற செய்து ஆராய்ச்சி செய்தனர். மேலும் இதன் பயன்பாட்டிற்கு பிறகு இறப்பு வகிதம் குறித்தும் ஆய்வுகள் நடத்தினர்.


நோய்கள்

இந்த ஆய்வில் 45 -75 வயதுக்குட்பட்ட 36,624 ஆண்கள் மற்றும் 42,920 பெண்கள் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு புற்றுநோய், ஸ்ட்ரோக், இதய நோய்கள், கல்லீரல் நோய்கள் என எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது.


இறப்பு விகிதம்

இந்த ஜப்பானிய டயட்டை பின்பற்ற துவங்கிய பிறகு 15% இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். முக்கியமாக செரிபரோவாஸ்குலர் நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.


ஆய்வாளர்கள்…

தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, சோயா, பால் உணவுகள், போன்றவற்றை சம அளவு எடுத்துக் கொள்வது தான் இந்த டயட்டின் அடிப்படை. இந்த டயட்டை பின்ப்பற்றுவதால் ஜப்பானிய மக்கள் மத்தியில் இதய நோய்கள் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், அவர்களது வாழ்நாள் கூடியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
- See more at: http://sudar24.com/18249#sthash.Qp2HjONi.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-