அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


.


பெரம்ப லூர், மார்ச்.24:
பெரம் ப லூ ரில் உணவு, தண் ணீ ருக் காக மான் கள் ஊருக் குள் புகுந் தன. அவற்றை நாய் க ள் விரட் டி ய தில், மேம் பா லத் தி லி ருந்து தவறி விழுந்து ஒரு மான் இறந் தது.
பெரம் ப லூர் மாவட் டம் வேப் பந் தட்டை, ஆலத் தூர் தாலுகா பகு தி க ளில் 35 ஏக் கர் காப்பு காடு கள் உள் ளன. இந்த பகு தி க ளில் 1500க்கும் மேற் பட்ட புள் ளி மான் கள், கிளை மான் கள் வசித்து வரு கின் றன. இவற் றுக் காக வனப் ப கு தி க ளில் குடி நீர்த் தொட் டி கள், சிறு சிறு தடுப் ப ணை கள் கட் டப் பட் டன. ஆனால் தற் போது அவை தூர்ந் து போய் பய னற்ற நிலை யில் உள் ளது. வனப் ப கு தி களை விட்டு மான் கள் வெளி யே றா மல் இருப் ப தற் காக அய் ய னார் பா ளை யம், வெண் பா வூர் வனப் ப கு தி க ளில் அமைக் கப் பட்ட சூரிய மின் வே லி க ளும் தற் போது செயல் பாட் டில் இல்லை.
தற் போது கடும் வெயில், மழை யின் மை யால் வனப் ப கு தி யில் புற் கள் காய்ந்து தண் ணீ ருக் கும் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது. இத னால் உணவு, தண் ணீர் கிடைக் கா மல் ஆயி ரக் க ணக் கான மான் கள் திண் டா டு கின் றன. இத னால் உணவு, தண் ணீர் தேடி வனப் ப கு தி யி லி ருந்து வெளி யே றும் மான் கள், அரு கில் உள்ள வயல் க ளில் கூட் டம் கூட் ட மா கப் புகுந்து பயிர் களை அழித்து நாசப் ப டுத் து வது வாடிக் கை யா கி விட் டது. வயல் க ளில் தண் ணீர் இல் லாத போது மான் கள் ஊருக் குள் புகுந்து, நாய் க ளி டம் சிக்கி தவிப் ப தும், சாலை க ளைக் கடக் கும் போது வாக னங் க ளில் அடி பட்டு இறப் ப தும், கிண று க ளில் தவறி விழுந்து பலி யா வ தும் அடிக் கடி நிகழ் கின் றன.
இந் நி லை யில் பெரம் ப லூர்-அரி ய லூர் ரோட் டில் உள்ள சித் தளி வனப் ப கு தி யி லி ருந்து வெளி யே றிய 6 புள்ளி மான் கள் நேற்று காலை துறை மங் க லம் பகு தி யில் புகுந் தன. அவற்றை நாய் கள் விரட் டி ய போது, மான் கள் தப்பி ஓடின. இதில் ஒரு மான் துறை மங் க லம் மூணு ரோடு பகு தி யில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் உள்ள மேம் பா லத் தில் ஓடி யது. ்நாய் க ளி டம் தப் பிக்க அங் கி ருந்து அடி பள் ளத் தில் குதித் தது. இதில் காய ம டைந்த மான் அதே இடத் தில் இறந் தது. மற்ற மான் கள் துறை மங் க லம் ஏரி பகு திக் குள் ஓடி விட் டன.
தக வ ல றிந்த தீய ணைப் புத் து றை யி னர் அங்கு சென்று இறந்த மானை மீட்டு வனத் து றை யி ன ரி டம் ஒப் ப டைத் த னர். மாவட்ட வன அலு வ லர் அன் ப ழ கன், வனச் ச ர கர் ரவீந் தி ரன் உத் த ர வின் பே ரில் வன ஊழி யர் கள் அந்த மானை கால் நடை மருத் து வ ம னைக்கு கொண்டு சென்று பிரேத பரி சோ தனை செய்து, பின் னர் புதைத் த னர்.
இனி யும் மான் கள் வெளி யேறி பலி யா வதை தடுக்க , வனத் தில் போதிய அளவு தண் ணீ ரும், உண வும் கிடைக்க வனத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-