அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானல் ஒன்றைத் தொடங்குகிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் வெளிச்சம் டிவி செயல்பட ஆரம்பிக்கும் என அந்தச் செய்தி சொல்கிறது.

“ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதாக இந்தச் சேனல் இருக்கும். ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மற்றவர்களுக்கு இணையாக ஒலிப்பதில்லை. செய்திகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இதே தான்” என்றூ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், சேனல் தொடங்கப்படுவதற்கான காரணத்தை சொல்கிறார்.

2012-ஆம் ஆண்டிலிருந்து தங்கள் கட்சிக்கான ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் விரும்பியதாகவும் அதை சாத்தியாமாக்க நிதி திரட்டும் பணிகளை தமிழகம், புதுச்சேரியில் இத்தனை ஆண்டுகள் செய்து வந்தார் எனவும் செய்தி சொல்கிறது.

வெளிச்சம் என்ற பெயர் மாற்றத்தைக் கொண்டுவரும் ஒளி என்ற பொருளில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் டிவி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மட்டும் இல்லாமல் அனைவருக்குமான பொழுதுபோக்கு அம்சங்களுடனும் வெளிச்சம் டிவி இருக்கும் என தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-