அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மனித உரிமை இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (NCHRO) செயலாளரான மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ‪‎முகமது‬ யூசுப், பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக, மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை? அதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் எவ்வளவு? அதுகுறித்த சுருக்கமான சாராம்சத்தை தரும்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. மேலும், கேள்விகளுக்கான விடையாக பிரதமர் அலுவலகம் கைகாட்டிய, வெளியுறவுத்துறை அமைச்சகமோ, கேபினட் செயலகமோ, நிதி அமைச்சகமோ, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகமோ கூட இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக, அவர்கள் முறையான பதிலளிப்பதற்கு பதிலாக, மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணம் போலவே, ஒருவரை ஒருவர் கைக்காட்டி நழுவுவதிலேயே குறியாயிருக்கின்றனர்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில் ரூ.2.07 லட்சம் கோடி வருமானம் வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் லோக்மாத் பத்திரிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெறும் ரூ.1398 கோடிதான் வருமானம் வந்துள்ளது என்பதை வெளிக்கொணர்ந்தது. இதன்மூலம் மோடி அரசு மிகைப்படுத்தி கூறிய வருமானம் அனைத்தும் புஸ்வானமாகியது.

அந்த வகையில், தற்போது மோடி அரசால் மிகைப்படுத்திக் கூறப்படும் வெளிநாட்டு முதலீடு குறித்த உண்மையான தகவல் வெளிவந்தால், எங்கே தங்களது குட்டு வெளிபட்டுவிடுமோ அச்சத்தில் பதில் தர தயங்குகிறதோ மோடி அரசு.

http://www.thehindu.com/…/madurai-rti-ac…/article8306079.ece

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-