அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கோவை அருகே இந்து முறைப்படி புதைக்கப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய முறைப்படி இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த நாகம்மாபுதூரில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் கிடப்பதாக அன்னூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சந்தேக மரணமாகப் பதிவு செய்து போலீஸார் அவரது சடலத்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

எனவே, கொலை வழக்காக பதிவு செய்து அன்னூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்டவரை பற்றி விவரம் தெரியாததால் அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த மார்ச் 16-ஆம் தேதி தனியார் தொண்டு நிறுவனத்தினர் உடலை மீட்டு ஆத்துப்பாலத்தில் உள்ள மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். இதனிடையே, அன்னூரில் கொலை செய்யப்பட்ட நபர் திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்ச ரியாசுதீன் (32) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ரியாசுதீனின் உறவினர்கள் இஸ்லாமிய முறைப்படி உடலை அடக்கம் செய்வதாக அன்னூர் போலீஸாருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் அளிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து,அன்னூர் போலீஸார், மதுக்கரை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆத்துப்பாலம் மயானத்திலிருந்து ரியாசுதீனின் உடலைத் தோண்டி எடுத்து குறிச்சி பகுதியில் இஸ்லாமிய முறைப்படி அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-