அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் காவலர்கள் எனக் கூறி கல்லூரி மாணவிகளிடம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி செவ்வாய்க்கிழமை திருடப்பட்டது.

பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் மோகன் மகள் திவ்யபாரதி (20). இவர், திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி செல்வதற்காக பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக திவ்யபாரதி காத்திருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பெரம்பலூர் நகரக் காவல் நிலையத்தில் புணிபுரிவதாகவும், கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் தங்களது பைகளில் பணம் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது எனக் கூறிய அவர்கள், திவ்யபாரதி வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனராம்.

மாணவியின் தந்தை மோகன் அப்பகுதியில் விசாரித்ததில் அவர்கள் இருவரும் காவலர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-