அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஓட்டினை விற்கமாட்டேன் என மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

விழிப்புணர்வு உறுதிமொழி

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக புதிதாக வாக்களிக்க உள்ள இளைய தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவிகள் சுமார் 1,500 –க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அந்த கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.

ஒட்டினைவிற்க மாட்டேன்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ–மாணவிகள் தங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக "ஸ்ஷீtமீ ஸீஷீt யீஷீக்ஷீ sணீறீமீ " என்ற வாசக வடிவில் நின்று சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நேர்மையுடனும், உண்மையுடனும் வாக்களிப்பது தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

அதில் "வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிக்கத்தயார் என்போம், எனது வாக்குரிமையை எக்காரணத்திற்காகவும், எந்தச்சூழலிலும் விலைக்கு விற்கமாட்டேன், நான் மட்டுமல்லாது எனது உற்றார், உறவினர்களையும் தவறாது வாக்களிக்கவும், நேர்மையுடன் வாக்களிக்கவும் வலியுறுத்துவேன், 18 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னால் ஆன பணிகளை செய்வேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். வாக்களிப்போம்! ஜனநாயகத்தை பேணிக்காப்போம்! என மாவட்ட வருவாய் அலுவலர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நடராஜன் மற்றும் சந்திரமெளலி, குமணன் உள்ளிட்ட் பேராசிரியர்கள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-