அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குன்னம் அருகே பஸ் வசதி இல்லாததால் பால் வேனில் பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர்.

பஸ் வசதி இல்லை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காடூர், புதுவேட்டக்குடி, நல்லறிக்கை, கொளப்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல கூடிய காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் வசதி இல்லை. மாலை அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருவதற்கும் பஸ் வசதி இல்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.

பால் வேனில் பயணம்

இந்நிலையில் அப்பகுதி மாணவ, மாணவிகள் காலையில் குன்னம் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்திற்கு காடூர், புதுவேட்டக்குடி, நல்லறிக்கை, கொளப்பாடி, வரகூர், அந்தூர் வழியாக பால் எடுத்து வரும் வேனில் ஏறி பள்ளிக்கு செல்கின்றனர். பின்னர் மாலை 4 மணிக்கு பள்ளி விடும் நேரத்தில் காத்திருந்து மீண்டும் வேனில் ஏறி வீட்டிற்கு வருகின்றனர்.

கால் வலியால் அவதி

மாணவ-மாணவிகள் கடந்த 15 ஆண்டுகளாக இவ்வாறு பால்வேனில் பள்ளிக்கு சென்று வருவதாகவும், பால் வேனை விட்டால் மாணவ-மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் இல்லை என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பால் வேனில் பயணம் செய்வதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வேனில் நின்று கொண்டே பயணம் செய்வதால் கால் வலி ஏற்படுவதாகவும், இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேற்கண்ட ஊர்களில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து உள்ளனர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-