அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி அரேபியாக்கு  செல்ல உள்ளீர்ளா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது? எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? சவுதி அரசின் விசா MOFA இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்கான விபரத்தை அறியலாம். இதற்கு முக்கியமாக MOFA(Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.
கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.

இணையம் செல்ல இங்கே சொடக்கவும் (https://visa.mofa.gov.sa/)

உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த MOFA எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்த MOFA எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ID எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.

மேலும் விபரம் அறிய:

சவுதி “Ministry of foreign Affairs” Call center telephone: 9200 33334 அழைக்கவும்.
Mofa office at Riyadh Telephone 00966 114055 000 or 406 7777.
Mofa office at Jeddah Telephone 00966 12 6690 900.
Mofa office at Dammam Telephne 00966 13 868 3310.

Source:Thanks Facebook Page Kilakarai Classifieds

மிகப் பயனுள்ள தகவல்களை உங்களால் இயன்றவரை பிறருக்கு பகிருங்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-