அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வாழ்த்துகள் சுசீலா அம்மா..!
******************************************

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி கானக் குயில்
பி. சுசீலா அவர்களுக்கு உலகிலேயே அதிக பாடல்கள்
பாடியதற்கான கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது..!

கடந்த அறுபது ஆண்டுகளில் இதுவரை 17,695 பாடல்களைப்
பாடி பெரும் சாதனை புரிந்துள்ளார்.

சுசீலா அம்மாவின் குரல் ஒலிக்காத தமிழக வீடுகளே இருக்காது.
அவருடைய பாடல்களை முணுமுணுக்காத
இசைப் பிரியர்களே இருக்க மாட்டார்கள்..

கவியரசு வைரமுத்து ஒரு முறை சொன்னார்:
‘தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் எனும்
பயிற்சியைப் பெற விரும்புபவர்கள்
சுசீலாவின் பாடல்களைக் கேட்க வேண்டும்.”

முற்றிலும் உண்மை. லகர, ழகர, ளகர
வேறுபாடுகளைத் துல்லியமாய்ப் பிரித்துக் காட்டும் ஆற்றல்...!

துயரம், துள்ளல், மகிழ்ச்சி, நாணம், காதல்,
தாய்மை, தாலாட்டு, பக்தி, வீரம் என்று
எல்லா உணர்வுகளையும் தம் குரலில் குழைத்துத் தந்தவர்.

அவர் நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் பல விருதுகளையும்
பெற இறையருள் துணை நிறகட்டும்.

வாழ்த்துகள் சுசீலா அம்மா.,.
-சிராஜுல்ஹஸன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-