அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்: கண்னோடு காண்பெதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை என்ற வரிகள் 3 டி தொழில் நுட்பத்தில் வரையப்படும் ஓவியங்களுக்கும் பொருந்தும். துபாய் கேன்வாஸ் திருவிழா தொடங்கியுள்ளது.மார்ச் 14ந்தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது ஜெபிஆர் எனப்படும் ஜீமைரா பீச் ரெசிடென்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் இவ்விழாவில் அப்பகுதி சாலை மற்றும் சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் 3டி தொழில் நுட்பத்தில் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் குதித்து குதிரைகள் மீது சவாரி, பாண்டாக்கள், குரங்குகள், விளையாடி பறக்கும் டால்பின்கள் துரத்துவதை, மாபெரும் அன்னம் சவாரி ,சிறுத்தை பாவனை, நீர்வீழ்ச்சிகள் என பல்வேறு ஓவியங்கள் நேரில் தோன்றுவது போது மிக சிறப்பாக தத்ரூபமாக வரையபட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து 3டி தொழில் நுட்ப ஓவியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-