அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


பெரம்பலூர்,

பெரம்பலூரில் குடும்ப தகராறில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.போலீஸ்காரர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 32). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுடைய மகள் ரித்திகா(5), தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறாள். கலியமூர்த்தி பெரம்பலூர் புறநகர் எளம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் சென்னை வண்டலூரில் உள்ள காவலர் பயிற்சி அகாடமியில் பணிக்கு கலியமூர்த்தி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பணிக்கு சென்ற கலியமூர்த்தி நேற்று பெரம்பலூர் திரும்பி வந்தார். பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டார். அப்போது புவனேஸ்வரி, தன்னையும், குழந்தையையும் கவனித்துக்கொள்ளாமல் தொடர்ந்து வேலையாக சென்று வருகிறீர்களே என்று கலியமூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தற்கொலை

மேலும் கலியமூர்த்தி ஊருக்கு செல்லும்போது புவனேஸ்வரி செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த புவனேஸ்வரி தனது மகள் ரித்திகாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மதியம் வீட்டின் பிரதான கதவை உள்புறம் தாளிட்டுக்கொண்டு படுக்கை அறையில் நைலான் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மதியம் வீட்டிற்கு திரும்பிய கலியமூர்த்தி, வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புவனேஸ்வரி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-