அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனயின்
வெற்றிகரமான செயற்கை விந்தேற்ற கருத்தரிப்பு
22 வயதுள்ள திருமதி. புவனேஸ்வரி என்பவர் குழந்தையின்மைக்காக நமது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுகினார். அவரது இரத்த மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் கருப்பையில் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு கருக்குழாய் அடைபட்டிருப்பதும் மற்றொன்று நல்ல முறையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. அவருக்கு நுண்துளை அறுவைசிகிச்சை முறையில் கருப்பை பிரச்சினைகள் சரி செய்யப்பட்டன.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையின் மூலமாக திருமதி. புவனேஸ்வரி கருவுற்றார். முறையான கர்ப்ப கால பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளின் இறுதியில் ஆரோக்கியமான 3.42 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார்.
செயற்கை கருத்தரிப்பின் மூலமாக இம்மருத்துவமனையில் நடைபெற்ற வெற்றிகரமான முதல் கருத்தரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-