அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தின் அனைத்து மஹல்லா பள்ளிவாசல்களிலும்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரே நிர்வாகிகளாக வர வேண்டும்

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம்தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின செயற்குழு கூட்டம், திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி வளாகத்தில் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹள்ரத் தலைமையில் 23-02-2016 அன்று நடைபெற்றதுகூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு-

கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிற பி.ஜே. என்பவர் குறித்து 16-6-2015-ம் தேதி சென்னை வடபழனி மஸ்ஜிது ஹக்கானி யில் நடைபெற்ற தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உயர்மட்டக்குழு கூட்டத்தில், ‘பி.ஜே. என்பவர் இஸ்லாமிலிருந்து வெளியேறி விட்டார்’ என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 11-8-2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், 19-01-2016 அன்று மதுரையில் நடைபெற்ற உயர் மட்டக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, 23-02-2016 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானத்தை முழு மையாக ஒப்புக் கொள்வ தென தீர்மானிக் கப்பட்டது.

2. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வரும் போலி தவ்ஹீது இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய பின், அவ்வியக்கத்திலுள்ள மார்க்கத் திற்கு முரணான கொடூர கொள்கைகளால் வெறுப்ப டைந்து, வெளி யேறிய சகோதரர்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் உண்மை யான கொள்கைகளின் பக்கம் திரும்பி வருமாறு இந்தச் செயற் குழு அன்புடன் அழைப்பதென தீர்மானிக்கப் பட்டது.

3. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மஹல்லாபள்ளிவாசல்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின் அடிப்படையில் இயங்கு வதற்காக வக்ஃபு செய் யப்பட்டிருப்பதால், இத்த கைய பள்ளிவாசல் களின் முத்தவல்லி, தலைவர், செயலர் போன்ற நிர்வாகப் பொறுப்புகளுக்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டு மென தமிழ்நாடு அரசின் வக்ஃபு துறையையும், மஹல்லா ஜமாஅத்தினரையும் இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தமிழ்நாடு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்பது தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மக்தப்களில் பணியாற்றும் உலமாக்களை உள்ளடக்கியிருப்பதால் – வேறு சில இயக்கங்களால் இயக்கப்படும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் போன்ற அமைப்புகளில் நமது உலமாக்கள் இணைந்து நமக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டாம் எனவும், அவ் வாறு இணையும் உறுப்பினர்களை – மாவட்ட அளவில் அடையாளம் கண்டு, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உறுப்பினர் பதவியியல் இத்தகைய வர்களை இடம் பெறச் செய்ய வேண்டாம் என்றும் மாவட்ட சபைகளை இந்த செயற்குழு கேட்டுக் கொள் கிறது.

5. ஆலிம் ஸனது பெறாத இமாம்களால், நமது உலமா சபைக்கு ஏற்படும் பாதிப்பு களை கவனத்தில் கொண்டு – இத்தகையவர்களை மாவட்ட நிர்வாகப் பொறுப்புகளில் நியமிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாக சபை களை செயற்குழு கேட்டுக் கொள் கிறது.

6. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை விளக்க மாநாடுகளை மாவட்ட அளவில் நடத்துமாறு மாவட்ட உலமா சபைகளை கேட்டுக் கொண்டும்,

7. வாரத்தில் ஒரு முறையோ அல்லது மாதத்தில் இரு முறைகளோ ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் மற்றும் ஷரீஅத்தின் விளக்கச் சட்டங்கள் குறித்து நம் சமுதாய பெண் களுக்கு பயிற்சி கூட்டங்கள் நடத்துமாறு கேட்டுக் கொள்வது என்றும்,

8. அரபிக் கல்லூரிகளில் பயிலும் தஹ்ஸீல் மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் குறித்து, அரபிக் கல்லூரிகளில் பயிலரங்கம் நடத்துவதுடன், மாலையில் பொது மக்களுக்காக கொள்கை விளக்க மாநாடு கள் நடத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகங்களை கேட்டுக் கொள்வது என்றும்,

9. நம் சமுதாயத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின்பால் ஈர்ப்பதற்கு, உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாவட்ட சபைகள் நடத்து வேண்டும் என்றும்,

10. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ் லிம் கைதிகளுக்கு ஜும்ஆ தொழுகை நடத்து வதற்காக ஏற்கனவே செய்யப்பட்டு வந்த வசதிகளை, மீண்டும் செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டும்,

11. இந்தச் செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை யும் செய்த திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வா கிகளுக்கு நன்றி தெரிவிப்பது.மேற்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-