அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 


ஷார்ஜா, மார்ச் 12-

கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் துபாயில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஷார்ஜாவில் உள்ள அல் மடாம் பகுதியில் வசிக்கும் நண்பரை சந்தித்துவிட்டு நேற்றிரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் அந்தக் காரின்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கேரள மாநிலம் நடப்புரம் அருகேயுள்ள பரக்கடாவ் பகுதியைச் சேர்ந்த அஷ்மிட்(19), கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது சுனூன்(19) மற்றும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிஃபாம்(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் மூவரின் உடல்களும் ஷார்ஜா அரசு மருத்துவமனையில் உள்ள பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-