அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய‌ பட்டாம்பூச்சி பூங்கா

துபாய்: வளைகுடா என்றதும் அதன் எண்ணெய் வளமும் பாலைவனமும் நினைவில் வந்து செல்லும் அதோடு மலர்களும் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சிகளும் நினைவுக்கு வரும் என்ற வகையில் துபாயில் பிரம்மாண்ட பட்டாம்பூச்சிகள் பூங்கா செயல்பட்டு வருகிறது.

பட்டாம்பூச்சி பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை அதிலும்ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளை ஒரே இடத்தில் காண்போமானால் உள்ளம் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் எனபதில் சந்தேகமில்லை. துபாயில் லட்சக்கணக்கணக்கான மலர்களோடு அமைந்துள்ள மிராக்கிள் கார்டன் எனும் மலர் பூங்கா இதன் அருகிலலேயே ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளுடன் பட்டர் பிளை கார்டன் என அழைக்கப்படும் பட்டாம் பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது.

இப்பூங்காவில் தனி தனியாக‌ மண்டபங்கள் அமைக்கப்பட்டு அதன் உள் அரங்கத்தில் பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷன நிலை உருவாக்கப்பட்டு அங்கு பல்வேறு வகையான மலர்களுடன் கூடிய செடி,கொடிகளோடு ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் சுற்றி திரிகிறது. சில பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்கள் உடையில் அமர்ந்து பரவசமூட்டுகிறது
கண்ணையும் மனதையும் குளிர்விக்கும் வகையில் சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்கிறது. உலகின் மிகப்பெரிய பார்வைளர்களுக்கான பட்டாம் பூச்சி பூங்காக்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-