அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
 


புதுடெல்லி


பிரதமர் நரேந்திர மோடி இன்று பெல்ஜியத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் அவர் செல்கிறார்.

3 நாடுகள் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை மேற்கொள்கிறார். முதலில் அவர் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சுக்கு இன்று இரவு புறப்படுகிறார்.

நாளை பிரசல்ஸ் நகரில், இந்திய–ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மோடி கலந்து கொள்கிறார்.வைர வியாபாரிகள்

அந்நாட்டு பிரதமர் சார்லஸ் மைக்கேலுடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும், பெல்ஜியம் நாட்டு வைர வியாபாரிகள் உள்ளிட்ட தொழில் அதிபர்களையும் மோடி சந்திக்கிறார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். பெல்ஜியம் நாட்டு எம்.பி.க்களையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து பேசுகிறார்.

பிரசல்ஸ் நகரில், கடந்த வாரம் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். எனவே, பிரசல்ஸ் பயணத்தின்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைதான், மோடியின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நந்தினி சிங்க்லா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.அமெரிக்கா

பிரசல்ஸ் நகரில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு 31 மற்றும் ஏப்ரல் 1–ந் தேதிகளில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்கும் 53 நாடுகளின் தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்கிறார்.

அதே மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்கிறார். அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா என்று கேட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ‘சர்வதேச மாநாடுகளில் சக தலைவர்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். சில சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். நவாஸ் ஷெரீப்பை சந்திப்பது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது’ என்று அவர் கூறினார்.சவுதி அரேபியா

அமெரிக்க பயணத்துக்கு பிறகு, பிரதமர் மோடி, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு செல்கிறார். மன்னர் சல்மான் பின் அப்துலாசீஸ் அல்–சவுத் அழைப்பின்பேரில் செல்லும் அவர், அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-