அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இந்து மதத்தை சேர்ந்த சிறுமியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக ராணி லக்ஷ்மிபாய் தைரிய விருது 15 வயதான நசியா என்ற முஸ்லிம் பெண்ணிற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தல்காரர்கள் இருந்து 6 வயது இந்து மதத்தை சேர்ந்த டிம்பி என்ற சிறுமியை நசியா காப்பற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சக்ஹிர் பாதிமா முஹம்மாடிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த நசியா வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது காப்பாத்துங்கள் என்று சிறுமி கதறிய சத்தம் கேட்டு அந்த இடந்திற்கு சென்றார். அங்கு டிம்பியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சி செய்துள்ளனர். நசியா தனது உயிரை பற்றி கவலைப்படமால் அவர்களின் கைகளை தட்டி விட்டார். அவர் தொடர்ந்து கூச்சலிட பொதுமக்கள் வருவதை கண்ட கடத்தல் காரர்கள் தப்பி சென்றனர்.

சிறுமியை காப்பற்றி அவரது பெற்றோரிடம் நசியா ஒப்படைத்தார். அவரை காப்பாற்றிய பிறகு தான் டிம்பி அவரது பள்ளி ஜூனியர் என்பது தெரிய வந்ததாக கூறினார்.ஆக்ராவில் முஸ்லிம் இந்து இடையிலான பதற்றம் நிலவும் போது கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தங்கள் குழந்தையை காப்பாற்றிய நசியாவை டிம்பியின் பெற்றோர்கள தங்கள் சொந்த மகள் போன்று பாவித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-