அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

அரியலூர் அருகே பாம்பு போல தோல் உரியும் விநோத நோயால் அவதிப்படும் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு தமிழ்மணி, சரத் குமார் ஆகிய மகன்களும், ஷோபனா என்ற வயது 13 என்ற மகளும் உள்ளனர். ஷோபனா பிறந்தது முதலே தோல் வியாதியால் அவதிக்கு ஆளாகி வந்தார். தோல் தடித்து உடல் முழுவதும் பாம்பு தோல் போல் உள்ளது. இதனால் மற்ற குழந்தைகள் போல பள்ளிக்கு செல்ல முடியாமலும், விளையாட முடியாமலும் தவித்து வருகிறார்.

ஷோபனா பிறந்தபோதே, உறவினர்களும், ஊர் மக்களும் கொன்றுவிடும்படி கூறிய நிலையில், சகோதரர்கள் மறுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் தோல் நோய் குணமாகவில்லை. தற்போது ஒரு ஏக்கர் நிலத்தில் மல்லிகை, காய்கறி விவசாயம் செய்து வரும் நிலையில், சிகிச்சைக்கு போதிய பணம் இல்லை என்று ஷோபனாவின் சகோதரர் தமிழ் மணி தெரிவிக்கிறார்.

ஷோபனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காகவும், மருத்துவ உதவிக்காகவும் பிறரின் உதவியை ஷோபனாவின் குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் கேட்ட போது மருத்துவ உதவி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-