அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், புதிய வாக்காளர் அடையாள பெறுதல், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தை பொதுமக்கல் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களின் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை களைவதற்கும், வாக்காளர் பட்டியல் தொடர்பான பல தகவல்களை பெறுவதற்கும் இச்சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-