அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய்: யுஏஇ மற்றும் இந்திய தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் இணைந்து அறிவு சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. அமீரகத்திஇந்திய தூதரக ஆதரவுடன் இந்திய வணிக மற்றும் தொழில் கவுன்சில் (IBPC) ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமீரக கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுக்கான அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது,

அமீரகமும் இந்தியாவும் மனித வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி அறிவு சார்ந்த பொருளாதாரத்தை இரு நாடுகளும் மேலும் அதிகரித்து கொள்ளலாம். ஏற்கெனவே அமீரகம் மற்றும் இந்தியா இடையே சிறப்பான நல்லுறவு நிலவி வருகிறது. அறிவு சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளும் சிறப்பான முறையில் மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கருத்தரங்கில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சீத்தாராம், இந்திய துணை தூதர் அனுராக் பூஷன், மற்றும் இந்திய தொழிலதிபர்கள் ,கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-