அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






குப்புஸ் – அரேபியர்களின் ரொட்டி! மேலும் நம்மவர்களின் சிக்கனத்திற்கான ரொட்டியும் கூட!!!

இதுதான் அரேபியர்களின் பாரம்பரிய ரொட்டி, பாகிஸ்தானில் தொடங்கி அப்படி அரபியே பாலைவனம் தொட்டுக் கிரேக்கம் வரை இவ்வகையான ரொட்டியே முதன்மை உணவு.

“ நான் ரொட்டி”, “குல்ச்சா ரொட்டி போன்ற வகைகளை நாம் அறிந்திருப்போம்!! அதுபோலத்தான் இதுவும். இது Flate Bread வகையைச் சார்ந்தது எனச் சொல்லலாம்.

இது நம்வூர் சப்பாத்தி போலச் சட்டியில் சுடப்படுதில்லை, அடுமனையில் வைத்துப் பேக் செய்வது போலச் செய்கிறார்கள்.

சுவை என்று எதுவும் விஷேசமாக இல்லை ஆனாலும் பசியைப் போக்கும், சத்தானதாகவும் இருக்கும்.

கடும் வெயிலிலும் காற்றிலும் உழைக்கும் மக்களின் விருப்ப உணவு, ஏழை பணக்காரன் என அனைவரின் உணவிலும் முதலிடம் பிடிக்கும்.

குப்புஸை மட்டும் தனியாகவும் சாப்பிடலாம், தேநீரில் தொட்டுச் சாப்பிடலாம், ஹம்மூஸ் எனப்படும் கொண்டை கடலைத் துவையல் வைத்துச் சாப்பிடலாம், வெறும் ஆலிவ் எண்ணையைத் தொட்டும் சாப்பிடலாம். வெறும் வெங்காயம் ரெண்டு மிளகாய் வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு – அப்படியாவது பசியை போக்கனும்மில்லியா.

தமிழர்கள் இதை வைத்து உப்புமா செய்கிறார்கள், சில்லி குப்புஸ் செய்கிறார்கள். எப்படியெல்லாமோ அதை நம்மூர் சுவைக்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் அது நம்மூர் மசாலாக்களோடு எடுபடுவதில்லை எனச் சொல்லுவேன்.

குப்புஸை ஹம்முஸோடு சாப்பிடவே எனக்குப் பிடிக்கும்!!

குப்புஸை அரேபியர்கள் சாப்பிடுவதை கண்டிப்பாக இங்கே சொல்லியாக வேண்டும், இரு கைகளாலும் குப்புஸை எடுப்பார்கள், அதை இரண்டாக கிழித்து இரு துண்டாக்குவார்கள், அந்த இரு தூண்டுகளிலிருந்து ஒரு பகுதியை மட்டும் கைகளில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக அதை பிய்த்து கறியை அதை வைத்தே பிய்த்து கறியை அதோடு லாவகமாக குப்புஸூக்குள் சுற்றி வாய்க்குள் செலுத்துவார்கள்.

இப்படியாக குப்புஸ் பிய்த்து சாப்பிடும் முறை கலாச்சாரம் சார்ந்ததாகவும் இருக்கிறது, அரேபிய கலாச்சாரங்களில் இப்படியாக இரண்டாக பிய்த்து பிரிப்பது கொடுப்பது உணவை பகிர்ந்துகொள்ளுதை நினைவுப்படுத்துவதாகவும் இருக்கிறது.
#mannadykaka

குப்புஸூக்குள் சிறிது வெள்ளரிக்காய், லெட்ட்யூஸ் இலை ஹம்முஸ் வைத்துச் சாப்பிட்டால் வெஜிடபுள் சாண்ட்விஜ், அதற்க்குள் ஃபெலாஃபெல் எனப்படும் வடையை வைத்தால் பெலாபெல் சாண்ட்விஜ், அதற்க்குள் சிக்கன் வைத்தால் சவர்மா, என இந்தக் குப்புஸீக்குள் எதையாவது வைத்து அதன் சுவையை எடுத்துச் சென்று கொண்டிருப்பார்கள்.

ஒரு குப்புஸ் சாப்பிட்டால் போதும் கம்முன்னு வயிறு இருக்கும். அற்புதமான அரேபிய உணவு.

குப்புஸுடுன் … மண்ணடிகாகா (ஆதம். ஆரிபின்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-