அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தாம்பரம்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநாத். தாம்பரம் அருகே சோமங்களத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் படித்து வந்தார். மாணவன் அபிநாத், கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் நேற்று பிணமாக கிடந்தார். குன்றத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

Sairam engineering college student found dead in well
இந்நிலையில் நேற்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு தன் மகன் சாவில் மர்ம இருப்பதாகவும், எனது மகன் 5 வயதிலேயே நீச்சல் கற்றவன். கிணற்றில் விழுந்து தற்கொலை செய்யவில்லை, அவனை கொலை செய்து கிணற்றில் வீசியதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என கூறி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, மாணவன் தற்கொலை தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் உறுதியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் | படம்: ஜி.கிருஷ்ணசாமி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-