அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 உக்ரைன் நாட்டை சேர்ந்த வெரா பிரின்டாக்
17 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை எற்றுக்கொண்ட வெரா பிரின்டாக், உக்ரைனின் தலைநகரமான கீவில் உள்ள
இஸ்லாமிய கலாச்சார மத்திய நிலையத்திலிருக்கும் மஸ்ஜிதில்
நடைபெற்ற விழாவின்பொழுது, தனது அல் குர்ஆன் மனனத்தை நிறைவு செய்தார்.


17 வருடங்களுக்கு முன்பு தனது முதல் சூராவை ஓதத்தொடங்கியபொழுது, சிரியாவை சேர்ந்த இவரது கணவர் இவருக்கு அரபு மொழியை கற்றுக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டபொழுதும்,பின்னர் படிப்படியாக கற்றுக்கொண்ட இவர், நீண்ட சூராக்களை தன்னால் ஓத முடியுமென நினைத்திருக்கவில்லையென்று கூறுகிறார்.

அன்றிலிருந்து 2014 வரை மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் முதலில் அரபு எழுத்துக்களை எழுதுவதன் மூலமும், பின்னர் அதன் மொழிபெயர்ப்பை எழுதுவதன் மூலமாகவும் சிறிது சிறிதாக அல் குர்ஆனுடைய வசனங்களை மனனம் செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

ஜிம்னாஸ்டிக் நிறுவனமொன்றில் தலைமை ஆசிரியராக இருக்கும் இவர், பட்டதாரியுமாவார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-