அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடந்த சனிக்கிழமை டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரது பாதுகாவலர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் ஸ்ம்ரிதி தனது ட்விட்டரில், தான் நலமாக இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில், விபத்து நடந்த போது, அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி விபத்தில் சிக்கியவர்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விபத்தில் தந்தையை இழந்த மகள், ஏ.என்.ஐ. செய்தி ஏஜன்சியிடம் கூறுகையில் ''மோட்டார் சைக்கிளில் சென்ற எங்கள் மீது முதலில் அமைச்சர் ஸ்ம்ரிதியின் கார் இடித்தது . சாலையில் விழுந்த என் தந்தை மீது பின்னாலேயே வந்த மற்றொரு காரும் ஏறியது.
In Accident That Killed Doctor, Police Back Minister Smriti Irani
இதனை பார்த்து நாங்கள் கதறினோம். ரத்த கரங்களுடன் ஸ்ம்ரிதி இரானியிடம் உதவி செய்யுமாறு கேட்டேன். ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் நிலையை பார்த்தும் பார்க்காத மாதிரி சென்று விட்டார். பின்னால் வந்த கார் மோதவில்லையென்றால் கூட எனது தந்தை உயிருடன் இருந்திருப்பார் '' என தெரிவித்துள்ளார்.விபத்தில் பலியானவர், மதுராவில் நடந்த திருமணத்திற்காக தனது மகள் மற்றும் உறவினர் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அமைச்சர் வந்த அமைச்சர் இரானியின் கார் மோதியதில் பலியாகியுள்ளார்.

ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மனிதவளத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் எது நடந்திருந்தாலும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் என்ற முறையில் ஸ்ம்ரிதி இரானி அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்விட்டரில்' நான் நலமாக இருக்கிறேன் 'என்று பதிவிடத் தெரிந்தவருக்கு சக உயிர்களை மதிக்கத் தெரியவில்லை போலும்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-