அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த வாரம் புயலுடன் கூடிய கடும் மழை பெய்தது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

புயல், மழையின்போது சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மக்கள் காரை தள்ளுவது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதுபோன்று மழை பாதிப்பு குறித்த எதிர்மறை படங்கள் மற்றும் வதந்திகளை வெளியிடுவது சட்டவிரோதமானது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரித்துள்ளது.

இணைய குற்றங்கள் சட்டத்தின்படி வதந்திகளை பரப்புபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதோடு, ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-