அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வாஷிங்டன், மார்ச் 27-

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப்.

அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பெரிதும் பேசப்பட்டு வரும் டிரம்ப், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டொனால்ட் டிரம்ப் அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் எனவும் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-