அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில்
26.3.2016 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு ” இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் தடம் பதிக்கிறார்களா ? தடுமாறுகிறார்களா “ என்ற தலைப்பில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர். ப. செல்வகுமார் அவர்களை நடுவராக கொண்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். க. நீலமேகம் வரவேற்புரையாற்றினார். ‘தடம் பதிக்கிறார்களே ‘ என்ற அணியில் கவிஞர். அகவி, மாணவி மிதுனா , பேராசிரியர். க. மூர்த்தி ஆகியோரும் , ‘ தடுமாறுகிறார்களே ‘ என்ற அணியில் கவிஞர். ஆ. இராமர், மாணவர் கதிரேசன் , கவிஞர். இ. தாஹிர் பாட்சா ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் மாணவர் கலைராஜன் நன்றியுரையாற்றினார்.எதிர்வரும் 14.04.2016 அன்று வேப்பந்தட்டை கல்லாறு தொலைக்காட்சி இந்நிகழ்வினை தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றமாக ஒளி
பரப்புகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-