அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 உலகின் நீண்ட தூர இடைவிடாத விமான சேவையை புகழ் பெற்ற விமான நிறுவனமான துபாய் எமிரேட்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது.

உலகின் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A 380, துபாயில் இருந்து தனது பயணத்தை தொடங்கி நியூசிலாந்தை சென்றடைந்துள்ளது. முதல் பயணமாக இந்த‌ விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து 14,200 கிலோமீட்ட‌ர் பயணம் செய்து நியூசிலாந்தின் ஆக்லாந்தை சென்றடைந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு குவான்டாஸ் பயணிகள் விமானம் சிட்னியில் இருந்து டல்லாசுக்கு தொடர்ச்சியாக‌ 13,800 கிலோமீட்டர் பயணம் செய்தது இதுவரை உலகின் நீண்ட தூரம் பயணம் செய்த சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எமிரேட்ஸ் ஏர்பஸ் A 380 முறியடித்துள்ளது. இதன் பயண நேரமாக 17 மணி நேரம் 15 நிமிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானமானது ஆக்லாந்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு 14,200 கிலோமீட்டர் தூரத்தை 17 நேரங்களில் 15 நிமிடங்களில் கடந்து துபாயை மீண்டும் வந்தடையும் துபாயில் இருந்து ஆக்லாந்துக்கு வழக்கமாக போயிங் 777 விமானமே சேவையில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தற்போது உலகின் மிக‌நீண்ட தூரம் இடைவிடாமல் பயணம் செய்யும் எமிரேட்ஸ் எபஸ் A 380 பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-