அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வி.களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள லட்சுமி பெருமாள் கோயில் மண்டபத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது .திடீர் “தீ” விபத்து
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் பஸ் நிலையம் அருகே லெட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாக்காலங்களில் சாமி திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த கோவிலின் அருகேயுள்ள மண்டபத்தில் மரத்தாலான தேர் மற்றும் சாமி திருவீதி உலா செல்வதற்கு தேவையான குதிரைவாகனம், மயில்வாகனம், கருட வாகனம், சப்பரத்தேர், அழகு தேர் மற்றும் மின்சார மேளம், கலசம், ஆதிபராசக்தி நாகபீடம் மற்றும் மரத்தாலான அய்யப்பன் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அந்த சிலைகள் மற்றும் மரத்தாலான பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட பொதுமக்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா மற்றும் மங்களமேடு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.அந்த பகுதியில் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத் சென்றனரா? அல்லது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மதக்கலவரங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மோப்பநாய்கொண்டு தீ ஏற்பட்டதர்க்காண காரணத்தை கண்டுபிடிக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது


குறிப்பு மாவட்ட SP.DSP.தகவல் அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆய்வுநடத்தி சென்றுள்ளார்கள்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-