அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூர் : பெரம்பலூரில் முதல்முறையாக தபால்துறையில் ஏடிஎம் மெஷின் பயன்பாட்டை கலெக்டர் நந்தகுமார் தொடங்கிவைத்தார்.
ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் தலைமை தபால்துறை அலுவல கத்தில், மாவட்டத்தின் முதலாவது தபால்துறை ஏடிஎம் மெஷின் செயல்பாட்டை கலெக்டர் நந்தகுமார் தொடங்கிவைத்தார். இதனையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு தலைமைத் தபால்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தபால்துறை யின் ஏடிஎம் மெஷின் பயன்பாட்டைத் தொடங்கிவைத்த கலெக்டர், வாக்காளர் விழிப்பு ணர்வு ஸ்டிக்கர்களை ஏடிஎம் சென்டரில் ஒட்டிவைத்துப் பேசியதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் தபால்நிலைய ஏ.டி.எம் பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் தகவல்தொடர்பு சாதன மாக விளங்கிவரும் அஞ்சல்துறை தற்போது நவீனமயமாகி வருகிறது. நடுத்தர மக்களின் சேமிப்பிற்கு உற்ற நண்பனாகத் திகழ்ந்துவரும் அஞ்சலகங்களின் செயல்பாட்டை மேலும் மெருகூட்டும் விதமாக அஞ்சலகங்களில் வாடிக்கையாளர்களின் வசதிக் காக ஏடிஎம் சென்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சேவையினைப் பயன்படுத்தி பயன்பெறவேண்டும் எனத்தெரிவித்தார். நிகழ்ச்சியில் தபால்துறையின் கோட்டப் பொறி யாளர் மைக்கேல்ராஜ் பேசியதாவது : பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏடிஎம் மையம் ஸ்ரீரங்கம் தபால் கோட்டத்தின் மூன்றாவது ஏடிஎம் ஆகும். அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த ஏடிஎம் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். வங்கிகணக்கு வைத்திருப்பவர்களும் இந்த ஏடிஎம் வசதியை பயன்ப டுத்தும் வகையில் விரைவில் தரம் உயர்த்தப்படும்.

கலெக்டரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள சிறுசேமிப்புத் துறையின் வருடாந் திர இலக்கினை எட்டுவதற்கு அஞ்சல்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அஞ்சல் சேவையை மேம்படுத்தும்விதமாக கணினிசேவை 1991ம்ஆண்டு துவங்கப்பட்டது. 2012ம்ஆண்டுமுதல் அஞ்சல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக் கப்பட்ட வங்கிசேவை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல்மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வருங்காலங்களில் ஒருங்கி ணைக்கப்பட்ட வங்கிசேவையின்கீழ் நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங், எஸ்எம் எஸ் பேங்க்கிங் அறிமுகபடுத்தப்பட உள்ளது என்றார்.

இதற்கு முன்பாக அஞ்சலகத்தின் தானியங்கி இயந்திர மையத்தில் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல்ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்கா ளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் நந்தகுமார் ஏடிஎம் மையத்தில் ஒட்டினார். அதனைத்தொடர்ந்து அங்குகூடியிருந்த பொதுமக்களுக்கும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தபால் உட் கோட்ட ஆய்வாளர் முத்துசுப்ரமணியன், தலைமை அஞ்சல்அலுவலக அதிகாரி சிவகாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-