அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்-ராஜாமணி. இவர்களுக்கு 9 வயதில் அரவிந்த் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ராஜாமணி கடந்த 16-ந் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அன்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு சுவாசிக்கும் திறன் குறைவாக உள்ளதாக தெரிவித்த டாக்டர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தனர். கடந்த 8 நாட்களாக செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அந்¢த குழந்தை இறந்து போனது. இதையடுத்து, சரியான சிகிச்சை அளிக்காத தால் தான் குழந்தை இறந்ததாக கூறி செந்தில் குமார்-ராஜாமணி தம்பதி குழந்தை உடலை வாங்க மறுத்து 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர்கள், மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்தும் சிசுவை காப்பாற்ற முடியாமல் போனது குறித்து விளக்கம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலை பெற்று சென்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-