அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெரம்பலூரில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள டயர்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டயர் கடை

பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரை சேர்ந்த ரவி (வயது 40) டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் விற்பனை யாளர்களாக சேகர் மற்றும் கோபிநாத் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வழக்கம் போல் கடையில் விற்பனையை முடித்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.

டயர்கள்-பணம் கொள்ளை

இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க சேகர் மற்றும் கோபிநாத் வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புதிய டயர்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 270-ஐ மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் வலைவீச்சு

இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரல் ரேகை மற்றும் சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-