அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்தின் 6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த சோதனையில் 6438 பேர் கைது:ஆவணங்கள் சரிபார்க்கப்ட்டு 1390 பேர் தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்


குவைத் போலீஸ் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் மஹ்மூத் அல்-Dossari உள்துறை உதவி துணைச் செயலாளர் தலைமையில் குவைத்தின் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சட்டத்தை மீறிய மற்றும் சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்யும் நபர்களை கைது செய்யும் சோதனை நேற்று மாலையில்(புதன்கிழமை) அதிரடியாக பெரிய போலீஸ் படை குழுவினர் உதவியுடன் நடைபெற்றது.


இந்த சோதனை தப்பிக்க முடியாதபடி அனைத்து இடங்களிலும் பாதைகள் அடைக்கப்பட்டு பின்வரும் ஆறு இடங்களில் நடைபெற்றது. Bnied அல்-கர் உள்ள Capital Governorate தொழில்துறை பகுதி,Hawally பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் As- Salimiyah ஓமான் தெரு, அல் அஹ்மதி ஆளுனர் தலைமையில் Mahboula பகுதியில் மற்றும் Fahaheel,Farwaniya மற்றும் ஜஹ்ரா அமரின் அல்-ஜஹ்ரா பகுதியில் நடைபெற்றது.

யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஒரே நேரத்தில் இந்த ஆறு இடங்களில் நடந்த சோதனையில் 6438 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்ட்டு 5048 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சட்டத்தை மீறிய, சட்டத்திற்குப் புறம்பாக குவைத்தில் தங்கியிருந்த மற்றும் பல வழக்குகளில் தேடப்பட்ட நபர்கள், முக்கிய குற்றவாளிகள் என 1390 நபர்களில் குற்றவாளிகள் அந்த அந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களை நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றபட்டனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-