அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வாயிலாக அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூரை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் வீரபாண்டியன் (33) மற்றும் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் முத்துக்குமார் (25) ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. வீரபாண்டியன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜ்குமாருக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் கேட்டனர். அதனை நம்பிய ராஜ்குமார் ரூ.19 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் தனது சகோதரருக்கு அரசு டிரைவர் வேலை வாங்கி தருவதற்காக ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதேபோல் கிஷோர், வேல்முருகன் ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் பணம் பெற்றுள்ளனர். இதன்படி மொத்தம் சுமார் ரூ.61 லட்சம் வரை வீரபாண்டியன் மற்றும் முத்துக்குமார் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ராஜ்குமார் உள்பட 3 பேருக்கு அரசு உத்தரவு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதில் ராஜ்குமார் மின்வாரியத்தை அணுகியபோது அந்த கடிதம் போலியானது என்று தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ராஜ்குமார் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-