அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி முன்னிலையில் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி ஆகியோர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று காதர் மொய்தீன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு முடிவடைந்து விடும் என்று தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-