அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 


தோஹா, மார்ச் 21-

கத்தார் நாட்டிலுள்ள மதினத் கலிபா பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிவந்த வேன், சாலை தடுப்பின்மீது மோதி, நிலைகுலைந்து கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அடியென் மாத்யூ ஷாஜி(5) என்ற ஆண்குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்தாரில் சுற்றுப்பயணம் செய்துவரும் கேரள மாநில சமூக நலத்துறை மந்திரி எம்.கே.முனீர் இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஷாஜியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அந்த உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் மேலும் நான்கு குழந்தைகள் காயமடைந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-