அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று இரவு 1:30 மணிபோல் 58–வது முறையாக கண்ணாடி உடைந்தது. வெளிநாட்டு வருகை முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள கண்ணாடி கதவு சுமார் 3 அடி அகலம், 4 அடி உயரத்தில் உடைந்து விழுந்தது. சத்தம் கேட்டு ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கண்ணாடி உடைந்து விழுந்த போது பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுபோல் இன்று மாலை 6 மணிபோல் 59 முறையாக கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. அசம்பாவிதம் எதுவும் எற்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-