அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
Vicks Action 500 Extra sale stopped in India after banவிக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரையை நிறுத்திட்டாங்களா?.. அட, ஆமாப்பா ஆமா!


புதுடெல்லி,

ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் மீது மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா என்ற தலைவலி,காய்ச்சல் மாத்திரை விற்பனையை நிறுத்தி உள்ளது.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக டோசேஜ் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டது.

இந்நிலையில் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரைகளை தயாரிக்கும், பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் - 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

இத்தனை வருடங்களாக பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்துகளைத் தடை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனங்களின் லாப விகிதம் பாதிப்படையும் என்று மருந்து நிறுவனங்கள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-