அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நகர்: காஷ்மீரில் முதல் பெண் முதல்வராக மெகபூபா வருகிற ஏப்ரல் 4ம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காஷ்மீரில் பிடிபி-பாஜ கூட்டணி ஆட்சியின் முதல்வர் முப்தி முகமது சயீத் இறப்புக்கு பிறகு அங்கு நிலையற்ற தன்மை காணப்பட்டு வந்தது. மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக இரண்டு கட்சிகளிடையே இழுபறி காணப்பட்டு வந்தது. இதனால் அங்கு ஜனவரி 8 முதல் கவர்னர் ஆட்சியும் அமலுக்கு வந்தது. ஏப்ரல் இறுதி வாரத்திற்குள் எந்த கட்சியும் பதவி ஏற்க முன்வராவிட்டால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் பிடிபி தலைவர் மெகபூபாவும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசிய பேச்சு வார்த்தையில் இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவானது.

இதை தொடர்ந்து பிடிபி தலைவர் மெகபூபா, பாஜ தலைவர் நிர்மல்சிங் ஆகியோர் கவர்னர் வோராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மொத்தமுள்ள அவையில் தற்போது பிடிபிக்கு 27 எம்எல்ஏக்களும், பாஜவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த சூழலில் இரண்டு கட்சிகளும் சம்மதம் அளித்துள்ளதை அடுத்து 3 மாதங்களுக்குள் அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற பிடிபி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் மெகபூபா ஒரு மனதாக சட்டபேரவை தலைவராக தேர்வானதைத் தொடர்ந்து காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

3 நாட்கள் வெளிநாட்டு பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி 3ம் தேதி நாடு திரும்புகிறார். எனவே அவர் பங்கேற்கும் வகையில் 4ம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. துணை முதல்வராக பாஜ தலைவர் நிர்மல் சிங் பதவியேற்பார். கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அமைச்சரவை பிரித்து கொடுப்பது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-