அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி : தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த 4ந் தேதி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி, முறையான ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வதை தடுக்க, பறக்கும் படைகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பணத்துக்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் திருப்பி கொடுக்கப்படும். இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்படும். இதனால், பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கில் பணம் சிக்கி வருகிறது. திருச்சி திருவானைக்காவலில் கும்பகோணத்தான் சாலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் தாசில்தார் பவானி தலைமையில் வாகன தணிக்கை நடந்தது. அப்போது, வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் வாகனம் ஒன்று வந்தது. அதை அதிகாரிகள் நிறுத்தினர். அதில் தனியார் செக்யூரிட்டி நிறுவன செயல் மேலாளர் சரவணன் உள்ளிட்ட 4 பேர் இருந்தனர். விசாரணையில், திருச்சி அலெக்சாண்டிரியா சாலையில் உள்ள வங்கி ஏடிஎம்களுக்கு பணம் செலுத்தும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.

ஆனால், பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால், வாகனத்துடன் பணத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்டிஓ ராஜராஜன், உதவி தேர்தல் அலுவலர் சுமதி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இரும்பு பெட்டிகளில் இருந்த பணத்தை எண்ணியபோது ரூ.2 கோடியே 80லட்சத்து 50ஆயிரம் இருந்தது. இதுகுறித்து, செயல் மேலாளர் சரவணனிடம் கேட்டபோது, ‘திருச்சி ஸ்டேட் பாங்க் பிரதான கிளையில் இருந்து ரூ.3 கோடியே 12 லட்சத்து 50ஆயிரம் கொண்டு வந்ததாகவும், வழியில் 2 ஏ.டி.எம்.களில் ரூ.32 லட்சம் நிரப்பியதுபோக மீதிப்பணம், ஸ்ரீரங்கம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்முக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

நெல்லையில் ரூ.79 லட்சம்: நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே அபிஷேகப்பட்டியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நெல்லை தொகுதி பறக்கும் படை தாசில்தார் முருகன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது, ஒரு வேனை சோதனையிட்டதில் 3 பைகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. விசாரணையில், ஏ.டி.எம்.மில் போடுவதற்காக ரூ.79 லட்சம் கொண்டு சென்ற து தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சையில் ரூ.50 லட்சம்: தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவை சேர்ந்த பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டனர். காரின் ஒரு சூட்கேசில் உரிய ஆவணங்களின்றி ரூ.50 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, பட்டுக்கோட்டை யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி மேலாளர் என்பதும், தஞ்சை வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ரோடு பகுதியில் திருப்பூர் ஆர்.டி.ஓ. பால்ராஜ் தலைமையில் நடந்த வாகன தணிக்கையில் ரூ.18 லட்சம் பறிமுதல் ஆனது.
ஓசூரில் உள்ள சோதனைச்சாவடியில் பெங்களூரில் இருந்து வந்த காரில் சோதனை நடத்தியதில், ரூ.53 லட்சத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேந்திரசிங் (52) என்பவரிடம் விசாரித்தபோது கெலமங்கலத்தில் நிலம் வாங்குவதற்காக கொண்டு செல்வதாககூறினார். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-