அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஷரீஅத் சட்டத்திற்கு பங்கம் வரக் கூடாது, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன 44 ஆம் பிரிவு நீக்கப்பட வேண்டும் என சமுதாயத் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள்,
ஜனாதிபதியிடம் ஒரு கோடி கையெழுத்துக்களை ஒப்படைத்து வலியுறுத்தல்!!

பொதுசிவில் சட்டத்தை பரிந்துரை செய்யும் அரசியல் சாசனம் 44 வது பிரிவை ரத்து செய்யக்கோரியும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தைக் காத்திட வேண்டியும், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தியது.


நாடு முழுவதும் பெற்ற ஒரு கோடி கையெழுத்து படிவங்களை, இன்று டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது ஸாஹிப் எம்.பி., தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ஸாஹிப் எக்ஸ் எம்.பி., தேசிய செயலாளர்கள் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., குர்ரம் உமர் அனீஸ்,தேசிய துணைச் செயலாளர் ஆம்பூர் அப்துல் பாசித் எக்ஸ் எம்.எல்.ஏ., கேரள மாநில செயலாளர் அப்துல் வஹ்ஹாப் எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர்.

ஷரீஅத் சட்டத்திற்கு பங்கம் வந்த போதெல்லாம், அல்லாஹ்வின் பேரருளால் அதனை சட்ட ரீதியாகச் சந்தித்து, அதனை தவிடு பொடியாக்கிய வரலாறு தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு.
ஜஸாக்கல்லாஹூ கைரன்
புகைப்பட உதவி
Zulfiqar Ahamed
மூல செய்தி ஆக்கம் உதவி
Iuml Ajmal Khan

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-