அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

கொச்சி,

தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3–ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:–

தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ஹெக்டேரிலும் (25.15 சதவீதம்), கேரளாவில் ஹெக்டேருக்கு 7,535 தேங்காய்கள் வீதம் 649.85 ஹெக்டேரிலும் (23.96 சதவீதம்) தென்னை சாகுபடி நடக்கிறது. இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மட்டும் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.

உலக அளவில் தென்னை சாகுபடி பரப்பளவில் இந்தோனேஷியா, பிலிப்பைன்சுக்கு அடுத்து 3–வது இடத்தில் இந்தியா இருந்தாலும், தேங்காய் உற்பத்தியில் ஹெக்டேருக்கு 10,615 தேங்காய்கள் வீதம் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-