அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்   நகரில்அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே செயல்பட்ட மதுக்கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே...

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் முறையாக இயங்குகின்றதா என்பது குறித்து துறை ரீதியிலான ஆய்வு மேற்கொண்டதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் இயங்கும் மதுபானக்கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 93 மது பாட்டில்களுடன் ரூ.3,360 பறிமுதல் செய்யப்பட்டது.

மதுக்கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை

இதேபோல் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகில் செயல்படும் மதுபானக்கடையிலும் பெரம்பலூரில் இயங்கும் மதுபானக்கடையிலும், சோதனை செய்ததில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மதுவிற்பனை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டு மேற்கண்ட இரண்டு கடைகளிலும் 114 மதுபாட்டில்களுடன், ரூ.9,950 பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கண்ட 3 கடைகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 207 மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.20,700 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13,310 ரொக்கம், 207 மதுபாட்டில்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து மேற்கண்ட 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-