அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ராமசாமி (55). இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்ற போது திண்டுக்கல்லில் இருந்து முருங்கைக்காய் ஏற்றி வந்த லாரி மோதி உயிரிழந்தார்.

புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மங்கலமேடு காவல் நிலைய ஆய்வாளர் சிட்ரிக் மேனுவேல், லாரி ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்த முத்து மகன் நல்லேந்திரனை (46) கைது செய்து விசாரிக்கிறார்.

தொழிலாளி சாவு:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் நா. ராஜு (70). இவர், அங்குள்ள உணவகத்தில் வேலைபார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார்.

புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸார் வழக்குபமோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வேப்பந்தட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராமகிருஷ்ணனை (48) கைது செய்து விசாரிக்கின்றனர்.

வாகனம் மோதி வெளி மாநில தொழிலாளி சாவு:

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், தரோஷா கிராமத்தை சேர்ந்தவர் ரகுதாஸ் மகன் நாராயணதாஸ் (32). இவர், பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரத்தில் தங்கி கட்டட வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் பிரிவுச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலிங்கம் விசாரிக்கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-