அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள பிம்பலூரை சேர்ந்தவர் சேகர் மனைவி சுதா (30). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி தனக்கொடி (31), அம்மாசி மனைவி அஞ்சலை (35), சாரதி மனைவி சுதா (29). இவர்கள், இனாம் அகரத்தை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான டிராக்டரில் செங்கல் ஏற்றும் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், திருவாளந்துறையிலிருந்து டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு வி.களத்தூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். வி.களத்தூர் ஏரிக்கரை அருகே சென்றபோது டிராக்டரின் முன்புற டயர் வெடித்து, சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சேகர் மனைவி சுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், டிராக்டரில் இருந்த சுதா, தனக்கொடி, அஞ்சலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து டிராக்டர் ஓட்டுநர் இனாம் அகரத்தை சேர்ந்த கணேசனை (26) கைது செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-