அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

,


பெரம்பலூர் பகுதியில்  வெவ்வேறு 

சம்பவங்களில் 3  பேர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகன் ராஜேந்திரன் (29). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த உம்மா ஹமீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், ராஜேந்திரன் அவரது வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூக்கிட்டு ஒருவர் சாவு: பெரம்பலூர் அருகேயுள்ள சமத்துவபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ராஜா (29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதாவுக்கும் (38), ராஜாவுக்கும் அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராஜா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-