அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக பாலங்கள் கட்டும்பணி நடந்து வருகிறது.

மூடுகல்பாலம் அகற்றம்

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விளாமுத்தூர் பிரிவு சாலை அருகே தற்போதுள்ள மூடுகல் பாலம் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக 21 மீட்டர் நீளத்திற்கு, 3 மீட்டர் அகலத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் பாலம் (ஆர்.சி.சி.) விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பழைய மூடுகல் பாலம் அகற்றப்பட்டு வருகிறது.

பாலக்கரை ரவுண்டானா அருகில் 2 பாலங்கள் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது உள்ள பாலக்கரை பாலம் மேலும் 11 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணியும், பாலக்கரை மயான சுற்றுச்சுவர் அருகே உள்ள பழங்கால குழாய் பதிக்கப்பட்ட பாலம் அகற்றப்பட்டு 40 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணியில் 2-வது கட்டவேலைகள் நடந்து வருகிறது.

இதனால் பெரம்பலூரில் சங்குப்பேட்டை - புறநகர் பஸ்நிலையம் இடையே வாகனங்கள் தடையின்றி சென்றுவர முடியும். இந்த பாலங்கள் கட்டுமான பணி மே மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் சூரியநாராயணன், உதவி பொறியாளர் கலைராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-